Wednesday, August 6, 2014

சினிமா காதல்

அன்பே வா, வா அருகில் வா
நான் பாடும் பாடல், கேளடி கண்மணி
என் மன வானில்
மௌன கீதங்கள் பாடும் வானம்பாடி நீயடி
எங்கேயும் எப்போதும் வருவேன் உன்னைத் தேடி
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,
நீதானே என் பொன் வசந்தம், புது வசந்தம்
கண்ட நாள் முதலே கொண்ட ஆசையில்
ஒரு கடிதம் கொடுத்த நான் ஜெண்டில்மேன்,
உன் காதலன் தேர்வுப் போட்டியில் முதல்வன்
ஆகாவிட்டால் உயிர் இல்லா எந்திரன்
உன் மௌனம் சம்மதமானால் இனி எல்லாம் சுகமே
இல்லையெனில் ராகம் தேடும் பல்லவியாய்
திசை மாறிய பறவையாய்
நெஞ்சிருக்கும் வரை, நினைவிருக்கும் வரை
உன்னை நினைத்து காலமெல்லாம் காத்திருப்பேன்
நீ வருவாய் என!

2 comments:

  1. Master Piece..you know my boss is not around and I am spending time reading your blog in office..and am almost lol.. :). Please give me permission to share this one.

    ReplyDelete