Saturday, August 23, 2014

இது எங்க சென்னை

உயிரை விட மயிர் முக்கியம் என்று
தலைக் கவசம் அணிய மாட்டோம் 
சற்று சிரமமாய் இருக்குதென்று 
ஸீட் பெல்ட் அணிய மாட்டோம் 

பச்சை விளக்கு வந்து விடும் என்று
நம்பிக்கையில் கடந்து செல்வோம் 
கடவாதவனை கடிந்து கொள்வோம்

ஒரு வழிப் பாதையில்
ஒய்யாரமாய் எதிர்த்து செல்வோம்
ஒழுங்காய் வருபவனை பற்றி ஓரிரு
பொன்மொழி உதிர்த்து செல்வோம்

இரு கார்களுக்கு உள்ள இடைவெளியை
ஒரு பைக்-கால் அளந்து செல்வோம்

வெள்ளியன்று சனியைக் கூட்ட நடுரோட்டில்
முழு பூசணியைப் பிளந்து போடுவோம்

பளிச்சிடும் உச்ச விளக்கொளி போட்டு
பார்வையை பழுது ஆக்குவோம்

காவல்துறை அதிகாரி வாகனப் பத்திரம்
கேட்டால் காந்தி நோட்டு நீட்டுவோம்

வண்டி ஒட்டிக் கொண்டே கைப்பேசியில்
இதோ வந்துகிட்டே இருக்கேன் என்று
சொல்லி போய் சேர்ந்து விடுவோம்!

1 comment:

  1. clap clap..thumbs-up...i was lol for every line...this ones too good Vijay :)

    ReplyDelete