Saturday, August 23, 2014

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

பள்ளி கல்லூரிகள் நிரம்பி வழியும் ஆனால் 
அதிகம் படிக்காதோர் எண்ணிக்கை தாராளம் 
படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு 
சுயதொழில் செய்யும் அண்ணாச்சிகள் 
இன்னும் அச்சில் பதியப்படாத அம்பாணிக்கள் 

வருடத்திற்கு பல லட்சம் பொறியாளர்களை 
ஏற்றுமதி செய்து விட்டு ஏணி போல்
அதே இடத்தில் நிற்கும் ஆசிரியர்கள்

தற்கொலையில் முடியலாம் எனத் தெரிந்தும் துணிந்து
விவசாயம் செய்துக் கொண்டிருக்கும் உழவர்கள்

சாதனை படைக்க துறைகள் பத்தவில்லை என்று
வேதனைப் படும் இளைஞர்கள்

உயிரே போனாலும் உண்மை வழி நடக்கும்
ஊழல் செய்யாத அதிகாரிகள்

மக்கள் உயிரைக் காக்க மனம் தளராது
உழைக்கும் மருத்துவர்கள்

இவர்களால் தான் சுதந்திர இந்தியா மிளிர்கிறது!!

1 comment:

  1. This was so heart warming...i see a lot of positivity in your writing..not that it was other way around before, i think the positive energy shows out more now..please write more...

    ReplyDelete