Monday, September 15, 2014

How to name it?

எண்ணமெல்லாம் எண்ணிய குறிக்கோளில் இருந்த போது
என்னவெல்லாம் சொல்லி என்னை
உன் பக்கம் திருப்பினாயடா?
கள்ளமெல்லாம் ஏதும் இல்லை
உள்ளமெல்லாம் உன் நினைவே உருத்துதடி என்று பேசி
மெல்ல மெல்ல என்னுள் வந்தாயடா
வாரங்கள் அல்ல வருடங்கள் ஒன்றாய் திரிந்தோம்
பாடங்கள் அல்ல பருவங்களைத் தானே படித்தோம்
மதம் தான் பாதகம் என்றால் நான் மாறி இருப்பேன்
ஆனால் நீ மனம் மாறிவிட்டாயே
ஆசைக் காதலியை சேர்வதை விட
அமெரிக்கா சென்று சேர்வது தான்
அவசியம் என்று ஓடி விட்டாயே!
கடற்கரை மணலில்
கலங்கரை விளக்கம் அருகில் இருந்தும்
வாழ்வில் வழி தெரியாது இருட்டில் தவிக்கிறேன்
அலைகளிடம் ஏதும் சொல்லி அனுப்பினாயா
அவைகள் ஆடம்பரமாய் வந்தாலும்
என்னைக் கண்டதும் அடங்கி விடுகின்றன
கால நேரம் தெரியாது நாம் கதைத்த கதைகள்
காலோரம் கிடக்கும் சங்கில் கேட்கிறது உன்
வரவுக்காக காத்திருந்து நான் கரைந்ததில்
வங்கக் கடலில் உப்பும் கூடி விட்டது
நீ பறந்து போனாய் தெரியும்
கடல் கடந்து போனாய் தெரியும் நம்
காதலையும் கடந்து போய் விட்டாயா?

No comments:

Post a Comment