Monday, September 15, 2014

இரவு நேர ரயில் பயணம்

வழியெங்கும் பின் நோக்கி 
செல்லும் மரங்கள்
செல்லும் ஊவார் எதுவாயினும் 
துணைக்கு வரும் நிலா 
ஜன்னல் கம்பியில் முகம் பதித்து 
வளைவுகளில் ரயிலை முற்றுமாய் காணுதல்
எவ்வளவு இனிமை
இந்த இரவு நேர ரயில் பயணம்
பாலகனாய் இருக்கையில் அன்று
இன்று மனம் நினைப்பதெல்லாம்
செல்லும் இடம் சென்றடைவது எப்பொழுது?

No comments:

Post a Comment