Thursday, July 30, 2009

அவன் அவள் எவனோ ஒருவன்

இது ஒரு காதல் கதை. நமது நாயகன் சாரங்கபாணிக்கு அமுதா மேல் கொள்ளைப் பிரியம். அவளுக்கும் அப்படித்தான். எப்பொழுது இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அவனை தாண்டிச் சென்றாலும் மெல்லிய புன்னகை பூத்துதான் செல்வாள். ஆனால் அவர்களிடையே ஒரு முக்கியத் தடங்கல் ரமேஷ் தான். அவன் சொல் பேச்சு கேட்டுத்தான் சில சமயம் தன்னை பார்க்க அமுதா வரவில்லை என்று கூட ஒரு சந்தேகம் உண்டு சாருவுக்கு.

சாருவை சில மாதங்களாகத் தான் அமுதாவிற்கு தெரியும் என்றாலும் மிக நெருக்கம் அவன். அவனது பூ போன்ற முகமும் கள்ளம் கபடமற்ற மனசும் தான் அவளை வெகுவாய் கவர்ந்தது. ரமேஷின் அன்பு வேலியை அசைத்து பார்த்ததும் அதுதான். மேலும் சாரங்கபாணி ஒரு வாயில்லா பூச்சி. அவனுக்கு அமுதாவை கண்டாலே பேச்சு வராது. அதனால் அவன் மேல் அமுதாவிற்கு இன்னும் பாசம் அதிகம். அவனும் எத்தனையோ முறை முயற்சி செய்து விட்டான் ஆனால் அவளை பார்ததால் ஒட்டிக் கொள்கின்றன உதடுகள்.

ஆனால் ரமேஷ் அப்படியில்லை, ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சரளமாக பேசுவான். நினைத்ததைப் பட்டென்று சொல்லி விடுவான். அவனை போல் பேச சாரங்கபாணி தொடர்ந்து முயற்சித்தான். ஒரு நாள் தன் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக் கொண்டு வீட்டில் ரமேஷ் இல்லா நேரம் பார்த்து அமுதாவிடம் தன் காதலை சொல்லி விட்டான். அமுதாவிற்கு ஒரே அதிர்ச்சி.

அமுதா பதறிப் போய் ரமேஷை உடனே தொலைபேசியில் அழைத்து ‘என்னங்க!! நம்ம சாரு இன்னிக்கு என்னப் பார்த்து முதமுறையா ”அம்மா”ன்னு கூப்பிட்டாங்க’ என்றாள்.

5 comments:

  1. Meliya thamizil azhagana,inimayana kathal kathai. Vazhtukal.

    ReplyDelete
  2. எல்லாம் ஷஷாங்க்கோட எஃபக்ட் மாதிரி தெரியுது .. ஹஹா .. தப்பில்லாம நல்லா எழுதறே .. keep it up .. ஷஷாங்க் வளர்ந்தப்புறம் அவனுக்கு படிச்சு காமி (அமெரிக்கால பசங்க எல்லாம் தமிழ் கத்துப்பாங்களான்னு எனக்குத் தெரியல) ..

    ~ சங்கர்

    ReplyDelete
  3. Thanks...Shashank will grow in India, so no worries!!

    ReplyDelete
  4. Nice one Vijay!
    The ending would defenitely bring an automatic smile on anyone's face : )

    ReplyDelete