நாட்கள் அல்ல மாதங்கள் அல்ல
காலங்கள் பல ஆயின கடிதம் ஒன்று எழுதி
நொடி நேரத்தில் சென்றடையும்
பொடித் தகவல்கள் தான் இப்பொழுது
கொடி கட்டி பறக்கின்றன
ஒரு ரூபாய் மடலில்
ஓர் அங்குலம் மீதம் விடாமல்
ஊரில் உள்ள உறவினர்கள் யாவரையும்
விவரமாய் விசாரித்து எழுதுவாள் அம்மா
பதட்டம் இல்லாமல் காத்திருப்போம்
பதில் கடுதாசி வர பத்து நாட்கள் ஆனாலும்
பக்கத்து வீட்டு தாத்தா வரை அனைவரும் நலம்
என்று எழுதி இருப்பாள் பாட்டி
பரீட்சை முடிந்ததும் கோடை விடுமுறைக்கு
வருகிறாய் அல்லவா என்று கேள்வியுடன்
முடித்து இருப்பாள் பாட்டி
தொலைப்பேசியும் அலைப்பேசியும் இல்லாதன்று
பொறுமையும் நிதானமும் நிறைந்து இருந்தது
அழைத்து ஐந்து நிமிடங்களில் பதில் வரவில்லை
என்றால் பாசம் இல்லை என்ற அளவுக்கு
இருக்கிறது நம் நிலைமை இன்று!
காலங்கள் பல ஆயின கடிதம் ஒன்று எழுதி
நொடி நேரத்தில் சென்றடையும்
பொடித் தகவல்கள் தான் இப்பொழுது
கொடி கட்டி பறக்கின்றன
ஒரு ரூபாய் மடலில்
ஓர் அங்குலம் மீதம் விடாமல்
ஊரில் உள்ள உறவினர்கள் யாவரையும்
விவரமாய் விசாரித்து எழுதுவாள் அம்மா
பதட்டம் இல்லாமல் காத்திருப்போம்
பதில் கடுதாசி வர பத்து நாட்கள் ஆனாலும்
பக்கத்து வீட்டு தாத்தா வரை அனைவரும் நலம்
என்று எழுதி இருப்பாள் பாட்டி
பரீட்சை முடிந்ததும் கோடை விடுமுறைக்கு
வருகிறாய் அல்லவா என்று கேள்வியுடன்
முடித்து இருப்பாள் பாட்டி
தொலைப்பேசியும் அலைப்பேசியும் இல்லாதன்று
பொறுமையும் நிதானமும் நிறைந்து இருந்தது
அழைத்து ஐந்து நிமிடங்களில் பதில் வரவில்லை
என்றால் பாசம் இல்லை என்ற அளவுக்கு
இருக்கிறது நம் நிலைமை இன்று!
:) very nice, so true!
ReplyDelete