எழுத்துக்கள் கற்கும் முன் வார்த்தைகள்
வார்த்தைகள் கற்கும் முன் வாக்கியங்கள்
இவ்வண்ணம் காணும் எதிலும் அவசரம்
ஓரிரு மதிப்பெண் குறைந்தாலும் கலவரம்
ஆங்கிலம் தமிழ் ஹிந்தி அறிவியல் கணிதம்
கணிப்பொறி என்று அடுக்கடுக்காய் புத்தகங்கள்
மெதுவாய் கொஞ்சம் மெதுவாய்
அவர்கள் அறிவு பெட்டகங்கள்
அளவில்லா பணச்சுமை பெற்றோர் மீது
அநியாயமாய் அவர்களின் கனவுச்சுமை பிள்ளைகள் மீது
எல்லோருக்கும் இஞ்சினியர் ஆகும் எண்ணமாம்
வண்ணத்துப் பூச்சிக்கெல்லாம் ஒரே வண்ணமா?
சுதந்திரமாய் பறக்க விடுங்கள் அவர்களை
சுற்றித் திரிந்து தேர்ந்து வருவர்
சற்றுப் பொறுமை காத்திருங்கள்!!
வார்த்தைகள் கற்கும் முன் வாக்கியங்கள்
இவ்வண்ணம் காணும் எதிலும் அவசரம்
ஓரிரு மதிப்பெண் குறைந்தாலும் கலவரம்
ஆங்கிலம் தமிழ் ஹிந்தி அறிவியல் கணிதம்
கணிப்பொறி என்று அடுக்கடுக்காய் புத்தகங்கள்
மெதுவாய் கொஞ்சம் மெதுவாய்
அவர்கள் அறிவு பெட்டகங்கள்
அளவில்லா பணச்சுமை பெற்றோர் மீது
அநியாயமாய் அவர்களின் கனவுச்சுமை பிள்ளைகள் மீது
எல்லோருக்கும் இஞ்சினியர் ஆகும் எண்ணமாம்
வண்ணத்துப் பூச்சிக்கெல்லாம் ஒரே வண்ணமா?
சுதந்திரமாய் பறக்க விடுங்கள் அவர்களை
சுற்றித் திரிந்து தேர்ந்து வருவர்
சற்றுப் பொறுமை காத்திருங்கள்!!
Good one! Inevitable challenge of the hour.
ReplyDeleteCouldn't guess the crux of it till midway through the second stanza.