நாடிப் பிடித்துப் பார்த்து மருந்து அளிக்கும் கைகள்
பீடி சுருட்டி தேய்ந்தன அதன் கல்வி ரேகைகள்
கலைப் படித்து சிலை வடித்து தரும் கரங்கள்
கல்லுடைத்து இலையெடுத்து வரும் நிஜங்கள்
கேலி கிண்டல் எனக் கூடி யிருக்கும் வயதினில்
போலி சுண்டல் எனக் கூவி விற்கும் கடலினில்
பட பட வென வெடித்த தீபாவளி பட்டாசில்
சட சட வென சிதறியது காகிதத் துகள்கள் மட்டுமல்ல
சில சிவகாசி சிறுவர்களின்
பள்ளிக்கூட ஆசைகளும் தான்!!
சற்றே சிந்தியுங்கள் இன்றே செயல்படுங்கள்!
குழந்தைத் தொழிலாளர்கள் முறையை ஒழிக்க
உங்களால் ஆனவற்றை செய்யுங்கள்!!
Good one Vijay!
ReplyDeleteVery nice and thought provoking Vijay... :)
ReplyDeleteசிந்திக்க வைச்சிட்ட விஜே ..
ReplyDeleteஆறாவது வரியில வரது போளி’யா போலியா ?
Thanks Anu and Janani. U r right Sangu, effect of writing this at 1.30am!!
ReplyDeleteஅருமை. குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களையும், வேலைக்கு சேர்க்கும் ஆட்களையும், கடுமையாக தண்டிக்க வேண்டும்.
ReplyDelete