Thursday, September 8, 2011

இளமையில் கொடுமை

நாடிப் பிடித்துப் பார்த்து மருந்து அளிக்கும் கைகள்
பீடி சுருட்டி தேய்ந்தன அதன் கல்வி ரேகைகள்

கலைப் படித்து சிலை வடித்து தரும் கரங்கள்
கல்லுடைத்து இலையெடுத்து வரும் நிஜங்கள்

கேலி கிண்டல் எனக் கூடி யிருக்கும் வயதினில்
போலி சுண்டல் எனக் கூவி விற்கும் கடலினில்

பட பட வென வெடித்த தீபாவளி பட்டாசில்
சட சட வென சிதறியது காகிதத் துகள்கள் மட்டுமல்ல
சில சிவகாசி சிறுவர்களின்
பள்ளிக்கூட ஆசைகளும் தான்!!



சற்றே சிந்தியுங்கள் இன்றே செயல்படுங்கள்!
குழந்தைத் தொழிலாளர்கள் முறையை ஒழிக்க
உங்களால் ஆனவற்றை செய்யுங்கள்!!