இந்த படத்தில் காதலைக் கையாண்டுள்ள விதம் தான் என்னை மிகவும் ஈர்த்தது. எப்போதும் கூடவே திரியும் தோழர் படை, தற்கொலை மிரட்டல் விடும் பெற்றோர், கத்தி கபடா தூக்கி வரும் குண்டர்கள் என சம்பந்தம் இல்லாத பேர்களோ காட்சிகளோ இல்லை. காதலையும் அதனால் வரும் விளைவுகளையும், காதலன் காதலி மட்டும் பேசி தீர்க்கிறார்கள். சாதாரணமான விஷயம் தான், ஆனால் திரையில் அபூர்வமாக காணப்படும் ஒன்று.
சிம்பு - த்ரிஷா இருவரும் கிடைத்த வாய்ப்பை சரியே பயன்படுத்தி நடித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே ஒரு நம்பும் விதமான காதல் அலை இருப்பது கூடுதல் பலம்.
பாடல் வரிகள் சற்று சுமாரே என்றாலும், பாட்டின் இசை அருமை அவை படம்பிடிக்க பட்ட விதம் பசுமை. அவற்றை கவனம் செலுத்தி இடம் பார்த்து இணைத்திருப்பதும் இனிமை. பாடல்கள் கதையை முன்னே எடுத்து செல்ல உதவுகிறது. பிண்ணனி இசை முண்ணனியில் இருக்கும் காதலை தாலாட்டுகிறது.
படம் மெதுவாய் செல்வது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், காதல் படத்திற்கு இந்த வேகம் தான் சரி என எனக்கு தோன்றியது. எதையுமே வேகமாய் எதிர்பார்க்கும் இந்தக் கால மக்களுக்கு காதலையும் துரித உணவைப் போல் வேகமாய் ருசியின்றி தராமல் இருந்ததற்கு ஒரு சபாஷ். படத்தின் முடிவில் நம்மை லேசாகப பிரட்டி போட்டு விட்டார், இயக்குனர். அந்நியர்களை நம் பாடல்களுக்கு நடனமாட விடுவதை தவிர்க்கலாம். அதனால், ஆடல் அசைவுகள் மனதில் ஓட்டாமல் நிற்கிறது.
மொத்தத்தில், விண்ணைத் தாண்டி வந்து என்னை போட்டுத் தாக்கி சென்றது இந்தக் காதல்.
Appreciate this line 'எதையுமே வேகமாய் எதிர்பார்க்கும் இந்தக் கால மக்களுக்கு காதலையும் துரித உணவைப் போல் வேகமாய் ருசியின்றி தராமல் இருந்ததுக்கு ஒரு சபாஷ். ' :) ~ Rubia
ReplyDeleteexcellent review...you have analysed the ups and downs of the movie very briefly...kudos to you
ReplyDeleteFantastic... But I beg to differ on the song picturisation.... I didnt like it at all...
ReplyDeleteThanks Rubia, Anu and Wolverine!!
ReplyDeleteஅருமையான விமர்சனம்.அனைத்தும் வேகமாக இயங்கும் இந்த உலகில், மெதுவாக திரைகதையை நகர்த்தி வெற்றி பெற்று இருக்கும் இயக்குனருக்கு என் பாராட்டைத் தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDelete