Sunday, March 28, 2010

பிஸ்த் பீட்ட்ர் - சவுன்டு சாலமன்

பிஸ்த் பீட்ட்ர்: என்னடா மச்சான் கடுப்பா இருக்க?


சவுன்டு சாலமன்: என் ஆளு ரோஸ் எனக்கு அல்வா கொடுத்த மேட்டர ஃபேஸ்புக்-ல ஸ்டேடஸ் அப்டேட்-ஆ போட்ருக்காடா


பிஸ்த் பீட்டர்: விடு மச்சி, இந்த ரோஸ் இல்லன்னா ஒரு ஜாஸ்மின், இதுக்கெல்லாம் நீ ஃபீல் பண்ணாத


சவுன்டு சாலமன்: அட அது கூட பரவா இல்லடா, அந்த ஸ்டேடஸ் அப்டேட்-அ பத்து பரதேசிங்க ‘லைக்’ பன்றானுங்களாம்.

Friday, March 26, 2010

ரகளை ராமு - சகலை சோமு

ராமு: ச்ச என் சின்ன வயசு கணக்கு வாத்தியார ஃபேஸ்புக்-ல நண்பரா சேர்த்தது தப்பா போச்சுடா


சோமு: ஏன்டா என்ன ஆச்சு?


ராமு: நான் ஃபார்ம்வில் விளையாடுறத பார்த்துட்டு, ‘நான் தான் அப்பவே சொன்னேனே, நீ மாடு மேய்க்கத் தான் லாயக்குன்னு’ அது உண்மை ஆயிடுச்சு பாத்தியா அப்படின்னு கிண்டல் பன்றாருடா!!



Vj


Friday, March 19, 2010

சட்டென்று தோன்றிய சிந்தனை - எண் ஒன்று

பன்ச் டயலாக் பேசும் ஹீரோ
பாஷை தெரியாமல் பொம்மை போல் வந்து போகும் ஹீரோயின்
பான் பராக் போட்டுத் துப்பும் வில்லன்
பார்வைப் பட்டாலே பத்தடி பறந்து போய் விழும் பயில்வான்கள்
பாய்ந்து அடிக்கும் கிராஃபிக்ஸ் சண்டைக் காட்சிகள்
இவை அனைத்தும் இல்லாத ஒரு தமிழ்ப் படம்,
தரமான படம் இனிமேல் வருமோ??


Thursday, March 18, 2010

என்ன அது?

வானில் ஒளிரும் வட்ட நிலவை மட்டமுற செய்வதும்
வாசம் கமழும் வண்ணப் பூக்களை வாசமற செய்வதும்
வார்த்தையில் வர்ணிக்க இயலாத வனப்பை யெல்லாம்
வாடி ஏங்க வைப்பதும் எது?
பச்சிளம் குழந்தையின் பால் போன்ற புன் சிரிப்பு!

Wednesday, March 10, 2010

மக்கள் திலகம், மாசற்ற மாணிக்கம்

Whenever I am down in my spirits, I start listening to MGR songs and almost instantly I feel rejuvenated and reinvigorated. There is so much energy oozing in most of his songs that they invariably tend to impart some of it to those hearing them, even if it is not the listener's intention.



என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்
உயரும் உன் மதிப்பு வெளிநாட்டில்

பாடல்: கடவுளென்னும் முதலாளி
- my favorite lines from one of my favorite MGR songs, so succinctly put, the importance of farming and villages to the development of a country.

There are more such inspirational lines and songs that I like from MGR collection. I recollect some of them here.

கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடிப் பிழைக்கும்
நம்மையும் பாரு நாடேசிரிக்கும்

பாடல்: எத்தனை பெரிய மனிதனுக்கு
On the importance of self development and being active and living in harmony.

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முருக்கு

பாடல்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
On the urge to fight against evil at all costs.

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்

பாடல்: உலகம் பிறந்தது எனக்காக
On the worship a mother deserves for she is the only goddess around.

மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா
இதை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா
ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு
உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்கு பாதை விடு

பாடல்: கத்தியை தீட்டாதே தம்பி

On the virtues of love and forgiveness and how essential they are to mankind

These songs along with many others from his movies covered a very wide array of feelings or emotions, to name a few, Romance, Courage, Patriotism, Governance, Mother or sibling love, Self-development.

Sometimes I wonder, how he was consistently motivated to take up only do-gooder roles (whenever he did a role of a bad guy, he had a twin role of a good one :) ) and preach only good things in his songs and movies. Though a good part of credit has to go to lyricists and musicians who were involved, one cannot ignore the fact that most of these were specifically written with MGR in mind. I never get tired of listening to his songs.

I guess his willingness to help the people strong enough to transform his on screen persona to the real life without a blip and shine as the unparalleled leader of all time. For once, I regret not having born earlier to have lived in the same era as him and followed him closer during his ascension. I was only a toddler when he died on 24th Dec 1987.

Saturday, March 6, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா...

’அலைகள் ஓய்வதில்லை’ காலத்தில் இருந்து ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும் அலைதான் இந்து - கிறுத்துவ காதல் கதை. ஆனால் இதையே புத்துயிர் ஊட்டி புது வண்ணம் தீட்டி கண்ணையும் மனதையும் கவரும் வகையில் ’விண்ணைத் தாண்டி...’ தந்திருக்கிறார் இயக்குனர் கௌதம்.

இந்த படத்தில் காதலைக் கையாண்டுள்ள விதம் தான் என்னை மிகவும் ஈர்த்தது. எப்போதும் கூடவே திரியும் தோழர் படை, தற்கொலை மிரட்டல் விடும் பெற்றோர், கத்தி கபடா தூக்கி வரும் குண்டர்கள் என சம்பந்தம் இல்லாத பேர்களோ காட்சிகளோ இல்லை. காதலையும் அதனால் வரும் விளைவுகளையும், காதலன் காதலி மட்டும் பேசி தீர்க்கிறார்கள். சாதாரணமான விஷயம் தான், ஆனால் திரையில் அபூர்வமாக காணப்படும் ஒன்று.

சிம்பு - த்ரிஷா இருவரும் கிடைத்த வாய்ப்பை சரியே பயன்படுத்தி நடித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே ஒரு நம்பும் விதமான காதல் அலை இருப்பது கூடுதல் பலம்.

பாடல் வரிகள் சற்று சுமாரே என்றாலும், பாட்டின் இசை அருமை அவை படம்பிடிக்க பட்ட விதம் பசுமை. அவற்றை கவனம் செலுத்தி இடம் பார்த்து இணைத்திருப்பதும் இனிமை. பாடல்கள் கதையை முன்னே எடுத்து செல்ல உதவுகிறது. பிண்ணனி இசை முண்ணனியில் இருக்கும் காதலை தாலாட்டுகிறது.

படம் மெதுவாய் செல்வது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், காதல் படத்திற்கு இந்த வேகம் தான் சரி என எனக்கு தோன்றியது. எதையுமே வேகமாய் எதிர்பார்க்கும் இந்தக் கால மக்களுக்கு காதலையும் துரித உணவைப் போல் வேகமாய் ருசியின்றி தராமல் இருந்ததற்கு ஒரு சபாஷ். படத்தின் முடிவில் நம்மை லேசாகப பிரட்டி போட்டு விட்டார், இயக்குனர். அந்நியர்களை நம் பாடல்களுக்கு நடனமாட விடுவதை தவிர்க்கலாம். அதனால், ஆடல் அசைவுகள் மனதில் ஓட்டாமல் நிற்கிறது.

மொத்தத்தில், விண்ணைத் தாண்டி வந்து என்னை போட்டுத் தாக்கி சென்றது இந்தக் காதல்.