Friday, May 13, 2011

ஐந்தாண்டு திட்டம்

இன்று வரும் தேர்தலின் முடிவுகள்

என்று வரும் மாறுதலின் விடிவுகள்?


ஆட்சியில் அமர்வது அய்யாவோ அம்மாவோ

தேர்ச்சியில் நிமர்வது தமிழகமாக இருக்கட்டும்


எம் அரசே!


ஊழல் தீர்க்காமல் இருப்பினும் உழவன் தன்

உயிர் நீக்காமல் இருந்திடச் செய்!


இலவசத் தொலைக்காட்சி கொடுப்பதை விடுத்து

இலங்கையில் கொலைக்காட்சி நடப்பதை நிறுத்து!


வரிப்பணத்தை உன் வங்கிப்பணமாக எண்ணி

ஒட்டு வாங்க வாரி இறைக்காதே!


பாரதத்தை உன் பரம்பரை சொத்தாக எண்ணி

குடும்பத்தாருடன் கூறு போடாதே!


தரணியில் தமிழகம் செழிக்கப் பாடு படு

தன்னலமின்றி என் நிலம் காக்க உறுதி எடு!