Friday, October 29, 2010

என்னே உனது அறிவு

உதிர் காலத்தில் நிறம் மாறி

நிலத்தில் விழும் இலையை

சிரித்துக் கொண்டு படம் பிடிக்கிறாய்

முதிர் காலத்தில் நிலை மாறி

நிலத்தில் விழும் மனிதரை

வெறுத்துக் கொண்டு முதியோர்

இல்லத்தில் இடம் பிடிக்கிறாய்!

Tuesday, October 12, 2010

ஆட்சி மாற்றம்

குடிமகன் 1: ச்ச...போன ஆட்சி-ல ரயில்வேத் துறை அமைச்சரா இருந்தவர விமானத் துறை அமைச்சரா போட்டது தப்பா போச்சு...

குடிமகன் 2: ஏன் என்ன ஆச்சு?

குடிமகன் 1: பீஹார்-ல இருந்து புறப்படற எல்லா விமானமும் தன் தொகுதி-ல ஒரு தடவை ஸ்டாப் பண்ணிட்டு தான் போகணும்னு உத்தரவு போட்டுட்டாரு

Monday, October 11, 2010

எந்திரன் ரீமேக்

எந்திரன் படத்தில் வரும் ஓரிரு காட்சிகளை வேறு சில நடிகர்கள் நடித்திருந்தால் வசனங்கள் எப்படி இருந்திருக்கும் என ஒரு சிறு கற்பனை.


காட்சி: வசீகரன் சிட்டியை அழிக்கும் காட்சி


விஜயகாந்த் (வசீ): காஷ்மீர் எல்லைல எல்லாராயும் உதைச்சு உதைச்சு கால் வலிக்குதுன்னு தாண்டா உன்ன உருவாக்குனேன், நீ என் நெஞ்சில உதைக்குறியா? எனக்கு ஆங்கிலத்துல பிடிக்காத ஒரே வார்த்தை 'ரோபோ'


காட்சி: க்ளைமாக்ஸ் காட்சி (பாட்டு பாடி அடக்குறார்)

ராமராஜன் (வசீ): ரோபோ ரோபோ நீ பெருமையுள்ள ரோபோ
ரோபோ ரோபோ நீ அருமையுள்ள ரோபோ
வாடி வாடி என்னுடைய ரோபோ


காட்சி: வசீ, ஸனா, சிட்டி பீச்சில் வாக்குவாதம்

டி. ராஜேந்தர் (வசீ):
வாடா டேய் சிட்டி
ஸனா இஸ் அ வேர்ல்ட் பீயூடி
நீ அவளோட அடிக்காத லூட்டி
அது இல்ல உன் டியூடி

Thursday, October 7, 2010

ரஜினி யார் நீ?

சில முறை படையெடுத்து வந்து இறுதியாய்
ஒரு முறை வெற்றி கண்டவன் கஜினி
பல முறை படம் நடித்துத் தந்து உறுதியாய்
ஒவ்வொரு முறையும் வெற்றி கண்டவன் ரஜினி

இத்தனை வேஷம் போட்டாலும்
உனக்குள் தீராது கலையார்வம்
எத்தனை கோஷம் போட்டாலும்
உன்னுள் ஏறாது தலைக்கர்வம்

மற்றவர்களின் ஏக்கம் நடிப்பிற்கு கிடைக்கும் விருது
உன்னுடைய நோக்கம் மக்களுக்கு படைக்கும் விருந்து

தமிழ் சினிமா இறந்தாலும் நீ மட்டுமே நிரந்தர சூப்பர் ஸ்டார்
தலை கீழாய் புரண்டாலும் மாதிரிகள் எல்லாம் பேப்பர் ஸ்டார்

அமைதியாய் என்றும் நீ மறுக்கும் விஷயம் அரசியல்
அதுவும் என்று நிகழுமோ எல்லாம் அவன் செயல்