Friday, January 15, 2010

அம்மா

ஈரைந்து திங்கள் இடைவிடாது என் சுமையை தாங்கி

இரவு நேர உறக்கங்கள் அடைவிடாது கண் இமையை நீங்கி

மருந்து பல தினம் உண்டு உன்னில் மாற்றம் பல கண்டு

ஈன்றெடுத்தா யென்னை என் இணையில்லா அன்னை

ஊருக்குள்ளே உனது வடிவம் அம்மாவே ஆனால் என்

உயிருக்குள்ளே உன துருவம் பெண் பிரம்மாவே!